இரா ரமேஷ் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  இரா ரமேஷ்
இடம்:  யாதும் ஊரே யாவரும் கேளீர்
பிறந்த தேதி :  06-Jun-1973
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  09-Jun-2021
பார்த்தவர்கள்:  78
புள்ளி:  26

என்னைப் பற்றி...

ஆசிரியர்-எழுத்தாளர்

என் படைப்புகள்
இரா ரமேஷ் செய்திகள்
இரா ரமேஷ் - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Jun-2021 8:34 am

அடக்கம் என்கிற களவானி….!

ஊடக வக்ரத்தை
உள்வாங்கும்
அட்டை பூச்சியின்
கூட்டாளி…!
.
கண் முன்
நிகழும்
அவலத்தை
தட்டிக் கேளாத
மாற்றுத் திறனற்ற
நோயாளி…!

மறதி நோயுக்கு
மருந்துன்னும்
விறக்தியில்லா
விருந்தாளி…!

அலறல்,
அவமதிப்பு,
அத்துமீறல்..
அனைத்தையும்
செல்ஃப்பிக்குள் சிக்கவைக்க
உரிமைகோரும்
படைப்பாளி,,…!

இருதியாய்…
தன்மானமில்லா
சுயமரியாதையற்ற
வாயில்லா பூச்சியாய்
வாழப்பழகிய
களவானி….!

மேலும்

இரா ரமேஷ் - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Jun-2021 10:00 pm

மண் சார்ந்த வாழ்க்க
மடமாறி போச்சு….!

சீமக் கருவேலம்
சிரமமில்லா வளருது
சாம வெளஞ்ச
எங்க சந்ததியர் கழனியில ….!

என் முப்பாட்டன் காலத்துல
மூனுபோகம் விளைஞ்ச நிலம் …

என் அப்பன் காலத்துல
அம்பாரமா இருந்த இடம்….

எனக்கு கருத்து தெரிஞ்சு
இப்ப கரம்பா போட்டுவிட்டேன்…!

காலக் கொடும இது
வேல தேடி
நான் வெளியபோறன்…!

நூரு நாள் வேளைக்கு
ஊர் கூடி தெருக்கோடியில போகயில…
கல வெட்டிய கையில எடுத்து
கடைசியா அவ போனா …!

ஏர்முன நுகத்தடிக்கு
ஏங்கி தவிச்ச காள
இங்கு என்ன நடக்குதுன்னு
எதுவும் தெரியாம
ஏக்கத்தோடு காத்திருக்க …

என் மண் சார்ந்த வாழ்க்க
மடமாறி போச்சேன்னு
மனச தேத்திக்கிட்டு

மேலும்

இரா ரமேஷ் - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Jun-2021 7:57 pm

இந்த பெருந்தொற்று பேரிடர் காலத்தில் .........!

தெருவோரம்…
வீதீயில்…..
கடைகளுக்கு முன்பாக….
நடை பாதையில்…..
பயணியர் நிழற்குடையின் கீழ்….

மனம்போன போக்கில்….
மனிதர்கள் சிலபேர்…..
குனம் மாறியதாய்
நம்மால் உதாசினப்படுத்தப்பட்ட
இயற்கையின் குழந்தைகளுக்கு

இந்த பெருந்தொற்று பேரிடர் காலத்தில்
உணவிட்டு,உயிரூட்டிய
ஒப்பற்ற மனிதர்களுக்கு
மனம்கனிந்த வாழ்த்துக்கள்.

மேலும்

இரா ரமேஷ் - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Jun-2021 12:31 pm

சொல் கிடங்கில் அகப்பட்ட…!

உயிர் நாடிக்குள்
உறைந்திட்ட வார்த்தை.. !

உணர்வுக்குள்
ஆங்காங்கே
கலந்திட்ட வார்த்தை….!

ஏக்கமுடன்
சிலர்
தேடுகின்ற வார்த்தை…..!

சொல் கிடங்கில்
அகப்பட்ட
சுவையான வார்த்தை ..!

எளியதாய்
எல்லோரும்
சொல்லிடும் வார்த்தை…!

ஒருவர் மாறி ஒருவர்
இருவராக சேர்ந்து
உதிர்த்திடும்போது,

உதடுகளில் வந்து
ஒட்டாத வார்த்தை…!

தவளையிடத்தில்
தாமரையிருந்தும் ,
கருவண்டு சிறகடித்து
அதன் காதருகில்
சொல்லும் வார்த்தை

காத ( ல்) லெனும் வார்த்தை ..!

மேலும்

இரா ரமேஷ் - சுரேஷ்ராஜா ஜெ அளித்த போட்டியை (public) பகிர்ந்துள்ளார்

தமிழ்மகளின் அழகை வரித்து கவிதை எழுத வேண்டும்
காதல் கவிதையாக இருக்கலாம்
அழகை மட்டும் வர்ணித்து கவிதை எழுதலாம்
உங்கள் மனதில் ஒரு பெண் கற்பனையில் எவுளவு அழகாக இருக்க வேண்டும் என எழுதலாம்
சிறந்த மிகச்சிறந்த வர்ணனையாக இருக்க வேண்டும்

மேலும்

வணக்கம் தோழரே உங்களின் மின் அஞ்சலை எனக்கு கூறுங்கள் நன்றி தோழரே @ sureshraja 12-Sep-2016 8:08 pm
அருமை தோழா .நன்றி 30-Aug-2016 11:12 pm
போட்டியில் வெற்றி பெற்றவர்கள் தங்களது மொபைல் எண்ணை எனக்கு மின் அஞ்சலில் அனுப்பவும். நான் ரீசார்ஜ் செய்து விடுகிறேன் தோழர்களே 27-Aug-2016 6:00 pm
போட்டியில் வெற்றிபெற்ற நண்பர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ! 27-Aug-2016 5:47 am
மேலும்...
கருத்துகள்

மேலே