சொல் கிடங்கில் அகப்பட்ட… சுவையான வார்த்தை

சொல் கிடங்கில் அகப்பட்ட…!

உயிர் நாடிக்குள்
உறைந்திட்ட வார்த்தை.. !

உணர்வுக்குள்
ஆங்காங்கே
கலந்திட்ட வார்த்தை….!

ஏக்கமுடன்
சிலர்
தேடுகின்ற வார்த்தை…..!

சொல் கிடங்கில்
அகப்பட்ட
சுவையான வார்த்தை ..!

எளியதாய்
எல்லோரும்
சொல்லிடும் வார்த்தை…!

ஒருவர் மாறி ஒருவர்
இருவராக சேர்ந்து
உதிர்த்திடும்போது,

உதடுகளில் வந்து
ஒட்டாத வார்த்தை…!

தவளையிடத்தில்
தாமரையிருந்தும் ,
கருவண்டு சிறகடித்து
அதன் காதருகில்
சொல்லும் வார்த்தை

காத ( ல்) லெனும் வார்த்தை ..!

எழுதியவர் : இரா.ரமேஷ் (13-Jun-21, 12:31 pm)
சேர்த்தது : இரா ரமேஷ்
பார்வை : 343

மேலே