அடக்கம் என்கிற களவானி…
அடக்கம் என்கிற களவானி….!
ஊடக வக்ரத்தை
உள்வாங்கும்
அட்டை பூச்சியின்
கூட்டாளி…!
.
கண் முன்
நிகழும்
அவலத்தை
தட்டிக் கேளாத
மாற்றுத் திறனற்ற
நோயாளி…!
மறதி நோயுக்கு
மருந்துன்னும்
விறக்தியில்லா
விருந்தாளி…!
அலறல்,
அவமதிப்பு,
அத்துமீறல்..
அனைத்தையும்
செல்ஃப்பிக்குள் சிக்கவைக்க
உரிமைகோரும்
படைப்பாளி,,…!
இருதியாய்…
தன்மானமில்லா
சுயமரியாதையற்ற
வாயில்லா பூச்சியாய்
வாழப்பழகிய
களவானி….!