விடியலென்னும் இயற்கைக்காக

என்னே! கதிரவன் மீது கொண்ட காதல்...!
சேவல் தினந்தோறும் காலை வேளை கவிபாடுகிறது...!
மொட்டுகள் முத்தமிட இதழ் விரிக்கிறது...!
வண்டுகள் இசைத்துக்கொண்டே நுகரத் துடிக்கிறது...!
புல்லில் உறங்கும் பனித்துளி கூட ஒளிந்து கொள்கிறது...!
பேரன்பின் பிதற்றலால் அல்லியும் அடுத்த நாள் வரவுக்குக் காத்திருக்கிறது...!
பறவைகளும் தங்கள் பாடுக்காக பலதிசை செல்கிறது...!
முன்னிரவில் கூடிக்களைந்த கள்வர்களும் காணாமல் போகிறார்கள்...!
விடியலென்னும் இயற்கைக்காக...!!


வேல் முனியசாமி.

எழுதியவர் : வேல் முனியசாமி (15-Jun-21, 1:43 pm)
சேர்த்தது : வேல் முனியசாமி
பார்வை : 118

மேலே