சுகம்பூக்கும் கன்று

முகமதையே மறைத்திடவே
முகக்கவச முண்டு – அதை
முகமணிந்து கொண்டு – நாம்
முன்நடக்கக் கண்டு – உயிர்
முடிக்கவரும் பிணிப்படைகள்
முகம்சுழிப்ப துண்டு.
**
சுகமுடனே இருந்திடவே
சுயதனிமை என்று – ஒரு
சுவரெழுப்பு நன்று – உயிர்
சுடும்கிருமி நின்று – உனை
சுறுசுறுப்பாய்க் காத்திடுநீ
சுகம்பூக்கும் கன்று

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (3-May-21, 2:13 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 74

மேலே