நீ பூப்பறிக்கையிலே

தென்றல்மென் காற்றினிலே தேன்மலர்கள் ஆடுதடி
புன்னகைப் பூவிதழுன் பூங்குழலும் ஆடுதடி
பொன்னெழில்கா லையில்நீ பூப்பறிக் கையிலே
என்மனமோ துள்ளு தடி


தென்றல்மென் காற்றினிலே தேன்மலர்கள் ஆடுதடி
புன்னகையே உன்பூங் குழலாட -என்னவளே
பொன்னெழில்கா லையில்நீ பூப்பறிக் கையிலே
என்மனமும் ஆடு தடி

-----வெண்பா இன்னிசையில் நேரிசையில்

எழுதியவர் : கவின் சாரலன் (3-May-21, 10:15 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 100

மேலே