அந்த நிமிடம்
மனதில் ஒருத்தி
மானசீகமாய்
மறைந்து இருக்கின்றாள்
அவளுக்கும் தெரியாமல்
அவன் அவளை
காதலிக்கின்றான்
அவள் வருவாளா என
ஏங்கும் நிலையில் ,
அவள் அழகிதான் இருந்தும்
இன்னொருவன் இதயத்தில்
அவள் புகுந்து விடாது
தன் காதலை சொல்ல துடித்தான்
வசமாய் அவள் அவன் கண்முன்னே
அவளும் அவனை எதேச்சையாக
பார்த்து விட்டாள்
அந்த நிமிடம் அவர்களின் வாழ்வில்
சொர்கத்தில் மிதப்பது போல்
உணர முடிந்தது
காதலின் மகத்துவம் வியப்படைய
கனிந்த பார்வைகள் பரிமாறிக் கொண்டன .