பணம்

பணப்பையில் பணமிருந்தால்
துணையாய் பலர் வருவர்
பணப்பையது காலியெனில்
துணையது பறந்து விடும்
காசிருந்தால் கைகூப்பி
வணங்கும் உலகம் இது
காசில்லையெனில் கைகொட்டிச்
சிரிக்கும் உலகம் இது
சலவைத்தாள் அது சாதிக்குமே
சத்தமில்லாமல் பல காரியங்களை
சலவைத்தாளுக்கு இருக்கும் மரியாதை
சக மனிதனுக்கு இங்கில்லை
அன்று பணமென்றால்
பிணமும் வாய் திறக்கும்
இன்று பிணம் எரிந்திட
பணம் வேண்டும்
தொப்புள் கொடி உறவுகள்
பெற்றோரின் தொகைக்கு தான் மரியாதை செய்கின்றனர்

எழுதியவர் : ஜோதிமோகன் (12-Jun-21, 9:10 am)
சேர்த்தது : ஜோதிமோகன்
Tanglish : panam
பார்வை : 317

மேலே