அழகின் அழகு
விழி மொழியாவது அழகு
நாணம் நனைவது அழகு
நினைவு நிஜமாவது அழகு
இலையின் விழிம்பிள்
பனித்துளிகள் அழகு
இதயத்துடிப்பில் ஏக்கம் அழகு
பருவத்தில் பூப்பது அழகு
பாவாடை தாவானியாவது அழகு
குழந்தை குமரியாவது அழகு
குமரிக்கு குங்குமம் அழகு
கூந்தலில் குமரி அழகு
காந்தள் கண் அழகு
கார்க்கூந்தல் காற்றாய்ப் பறப்பது அழகு
பிறைக்கு நெற்றியழகு
இவளின்
பிறப்பே அழகு!
மொழியின் மோகம் அழகு
விழியின் மௌனம் அழகு
ஆணுக்கு பெண்அழகு
ஆண்மைக்கு வீரம் அழகு
மயிலின் தோகை அழகு
மைனரின் மீசை அழகு
முயலுக்கு வால் அழகு
மானின் கண்ணழகு
மையலுக்கு இருட்டழகு
பாட்டுக்கு பன் அழகு
சுதிக்கு சுரம் அழகு
சுரத்திற்கு ராகம் அழகு
நடனத்தில் நளினம் அழகு
நளின நடையழகு
நகைக்கு பொலிவு அழகு
நகைக்கு பல் அழகு
மணியின் ஓசை அழகு
ஓசையில் ஒயில் அழகு
மணி ஆரமே அழகு
மணிகாட்டும் முள் அழகு
மணிப்புறாவின் கழுத்தழகு
சுனை சுரப்பது அழகு
கனைத்த குதிரை அழகு
பசுவின் பால் அழகு
பால் கரப்பதை பார்ப்பது அழகு
கரந்த பால் நுரைப்பது அழகு
கன்று அன்னையின் மடியை முண்டுவது அழகு
முட்டும் முரட்டுக்காளை அழகு
மிரண்ட அதன் கண் அழகு
கலையில் திமிரழகு
திமிரில் சுமந்த கர்வம் அழகு
கர்வத்தில் முகம் சிவப்பது அழகு
சுவையைச் சுவைப்பது அழகு
சுவைத்த உதட்ழகு
உதட்டின் உருக்கம் அழகு
ஏக்க விழி அழகு
ஏந்தும் உன் கையழகு
மரபுக்கு மதிப்பழகு
மண்ணுக்குச் செடியழகு
வயலுக்கு வரப்பழகு
பசிக்கு புசி அழகு
பந்தத்திற்கு பாசம் அழகு
உயிருக்கு உடம்பு அழகு
துறவுக்கு உறவு அழகு
உறவிற்கு பிரிவழகு
உடைக்கு நடையழகு
படைக்கு போர் அழகு
போருக்கு வால் அழகு
போரிட்ட இவள் விழியழகு
வெற்றிக்கு உன் நெற்றிச்சுட்டியழகு
உணவில் சுவை அழகு
உணர்ச்சியில் தளர்ச்சி அழகு
பாடம் படிப்பது அழகு
பாவாடை பறப்பது அழகு
பால் கொதிப்பது அழகு
பருவ முறைப்பழகு
பனியில் தோய்ந்த பருதி அழகு
பவனிவரும் நற் தேர் அழகு
பூவுக்கு செண்டழகு
பூவைக்கு கொண்டையழகு
தேன் தோய்த்த வண்டழகு
இலை தைத்த எரும்பழகு
நடைக்கு நயனம் அழகு
நயனத்தில் சயனம் அழகு
உணர்வுக்கு உதிரம் அழகு
எண்ணத்திற்கு ஏக்கம் அழகு
ஏக்கத்திற்கு தூக்கம் அழகு
தூங்கத் துடிக்கும் கண் அழகு
தூங்க மறுக்கும் இமைகள் அழகு
வியற்வைக்கு நாற்றம் அழகு
வீம்புக்கு வம்பு அழகு
நாணலுக்கு நளினம் அழகு
நகைக்கு நாணம் அழகு
மொழியின் மோகம் அழகு
மோகத்திற்கு மௌனம் அழகு
தமிழன் மொழியழகு
தமிழனாய் பிறப்பது அறிது
காலையில் கனவு அழகு
கதிரவன் வரவழகு
காதலுக்கு கற்பழகு
காத்திருக்க வைப்பதழகு
தாமரைப் பூப்பது அழகு
தடாகம் தவழ்வது அழகு
தழுவும் (தாடகை) இவள் தடுமாற்றம் அழகு
இருண்ட இருளழகு
இடித்த முழக்கம் அழகு
இடையில் பிறந்த மின்னல் அழகு
தூவிய மேகத்தில் சாரல் அழகு
துடித்திடும் பறவைக் கூட்டத்தைப் பார்ப்பது அழகு
தாரைகள் தவழும் மேகம் அழகு
தாரையிவள் ஆடை நனைவதழகு
நனைந்த உடைகளில்; உறவழகு
காட்டுக்கு புதர் அழகு
காடையின் முட்டை அழகு
வம்புக்கு விரட்டிய நாயின் நாக்கழகு
வீம்புக்கு நிற்கும் ஒருகால் கொக்கு அழகு
புயலின் சீற்றம் அழகு
புரட்டி போட்ட மரம் அழகு
சுட்டிடும் மணல் அழகு
சடுகடு கால் அழகு
நீரறற்ற பாலைவனம் அழகு
பாலைவத்தில் சோலை அழகு
கானலைச் சுமந்த மணலில் காற்றழகு
நடைக்கு இடை அழகு
இடைக்கு இடையழகு
இடையில் சென்ற காற்றழகு
மதியாய் தேய்ந்த முகம் அழகு
மடியில் சாந்த உறவழகு
மழையின் துளியில் உன் நினைவழகு
படபடத்த பதற்றப் பார்வை அழகு
பார்வையில் பாவை அழகு
பாம்பின் படம் அழகு
படைபிள் பின்னழகு
எலியின் பல்அழகு
உலியின் கூர்மையழகு
ஏனியின் படியழகு
இவள்
ஏன் இப்படியழகு
காளைக்கு நுகத்தழகு
கவிதைக்கு காதல் அழகு
நாதத்திற்கு சுரம் அழகு
நாணத்திற்கு புண்ணகை அழகு
குளத்திற்கு மீன் அழகு
குதித்து நீந்திய நினைவழகு
குழைந்த சோறு அழகு
கொதிக்கும் குழம்பழகு
குவளைக்கு துணையழகு
தவளையின் குரல் அழகு
தத்திடும் அதன் நடை அழகு
தவழ்ந்திடும் கொடி அழகு
துறவுக்கு துயர் அழகு
துயருக்கு தனிமை அழகு
தனிமைக்கு தயக்கம் அழகு
தயங்கிடும் கலக்கம் அழகு
தடுமாற்றித்தில் நீயழகு
களவுக்கு கதவழகு
கழிப்புக்கு வரம்பு அழகு
காற்றின் வரவு அழகு
காத்திட வைத்தல் அழகு
நாற்றின் நடையழகு
நிடிப்பில் நங்கையழகு
கதிருக்கு கழுத்தழகு
கார் இருளுக்கு ஒளியழகு
குயிலுக்கு குரல் அழகு
குழந்தையின் குழைவழகு
மயிலுக்கு தோகையழகு
மையழுக்கு இளமையழகு
ஆற்றின் ஓட்டம் அழகு
அலைந்திடும் அலையின் துடிப்பழகு
படர்ந்த மலைக்கு பசுமை அழகு
பாய்ந்திடும் அருவியின் சீற்றம் அழகு
சிவந்திட்ட மேகத்திற்கு
நிலவு அழகு
சுட்டிடும் சூ_ரியனுக்கு
நிழலுடன்; மரம் அழகு
மண்ணுக்கு வாசம் அழகு
மணந்திட்ட பெண்ணுக்கு
மெட்டியழகு.
போரில் வீரம் அழகு
வெற்றிக்கு உழைப்பு அழகு
தோல்விக்கு துயர் அழகு
விதிக்கு மதியழகு
காக்கையின் கருப்பழகு
கருமேகக் கூட்டம் அழகு
காத்திருந்த கால்கள் அழகு
கனிந்த காதல் அழகு
கலங்கிய காதல்
உதிர்த்த
கண்ணீர்த் துளிகளில்; அழகு
வைகரைப் பொழுதழகு
வம்ச விளக்கழகு
கனிந்த கனியழகு
கருவில் குழந்தையின் உதை அழகு
மூப்பில் பினியழகு
முடிந்த பின் உடலழகு
நட்புக்கு மதிப்பழகு
நாதத்திற்கு சுரம் அழகு
நட்பு பூ பூப்பது அழகு