நிலவு ஒன்றுதான்

நிலவு ஒன்றுதான்

பால் நிலவின்
வெளிச்சம் இந்த
கள்ளனுக்கு
தொல்லையாய் தெரிய
சலித்து போய்
தன் குடிசைக்கு
திரும்பினான்

மின்சாரம் இல்லாமல்
இருளாய் இருந்த
அந்த குடிசையின்
வாசலில்

நிலவின் வெளிச்சத்தில்
ஆர்வமாய் படித்து
கொண்டிருந்தான்
அவனின்
செல்ல மகன்

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (11-Feb-25, 11:25 am)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
Tanglish : nilavu onruthaan
பார்வை : 2

மேலே