தெரிந்தால் சொல்லுங்கள்
![](https://eluthu.com/images/loading.gif)
அடிக்கடி அழாதே
அதிகம் கோபப்படாதே
ஆட்டம் போடாதே
எதிர்த்து பேசாதே
சத்தமாய் சிரிக்காதே
வாய் ஓயாமல் பேசாதே
வெளியே போகாதே
வெளியே நிற்காதே
பெரியவர் முன் அமராதே
வீட்டிற்கு வந்தவர் முன் நிற்காதே
வீட்டிற்கு வருபவரிடம் சிரித்து பேசாதே
இங்கே வராதே
அங்கே போகாதே
அதை செய்யாதே
இதை செய்யாதே
அடக்கமாய் இரு
அடங்கி இரு
ஒழுங்காய் இரு
ஓரமாய் இரு
உன் இடமறிந்து இரு - என்றெல்லாம் இன்றும் சொல்கிறார்கள்.
வீட்டில் கணவனை இழந்த என் அக்காளையும்
அவளுடன் பிறந்த என்னையும்...
நாங்களும் இருக்கிறோம்....
எதற்கென்று தெரியாமல்!
காரணம் தெரிந்தால் சொல்லுங்கள்?
அதையாவது தெரிந்து கொள்கிறோம்!!!