மனதின் ஆழம்
நீலம் எனக்குப் பிடிக்கும்
வானின் நீலம், கடலின் நீலம்
என் வீட்டு ஜன்னல்
திரை களின் நீலம்...
நான் வாங்கி அடுக்கி வைத்த
சட்டை களின் நீலம்...
ஏனென்றால் உன் கண்களின்
நிறமும் அதுவன்றோ?
ஆழம் எனக்குப் பிடிக்காது..
நதியின் ஆழம், கடலின் ஆழம்
மரணத்தைப் புதைக்கும்
குழியின் ஆழம்..
ஏனென்றால் உன் மனதின்
ஆழம் நான் அறியமுடியவில்லை
என்பதால்.....
_________________________________