Rohini - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : Rohini |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 21-May-2021 |
பார்த்தவர்கள் | : 95 |
புள்ளி | : 34 |
உன்முகம்தான்
முழுநிலவு என்றேன்
நிலவு கோபித்துக் கொண்டு
மேகத்திற்குள் மறைந்தது..
உன் கார்கூந்தல்தான்
மழைமேகம் என்றேன்!
மேகம் கோபித்துக் கொண்டு
கண்ணீர்விட்டுக்கதறியது..
உன் கண்மீன்கள்தான்
வானத்து விண்மீன்கள் என்றேன்!
விண்மீன்கள் கோபித்துக் கொண்டு
காணாமல் போய்விட்டன..
வானின் நீலமும்
கடலின் நீலமும் உன்
விழியின் நீலத்திற்கு
சம மில்லை என்றேன்!
வானம் கோபித்துக் கொண்டு
கர்ஜிக்க ஆரம்பித்தது..
கடல் கோபித்துக் கொண்டு
ஆர்ப்பரிக்க ஆரம்பித்தது..
உன்னை அழகி என்றால்
இயற்கைக்கு ஏன் இத்தனை
கோபம் வருகிறது?
இதயமில்லாத
மனிதன்
எந்திரன்
________________
யாரும்
ஏற முடியாத
விமானம்
பறவை
_____________
அது எங்கே போகிறது?
எதை நோக்கி போகிறது?
யாரைநோக்கிப் போகிறது?
ஒன்றும் புரியவில்லை!
அதன் ஓட்டம் ஏதோ
காரணத்தின் பொருட்டுதான்
என்பது மட்டும் தெரிகிறது!
அது மலைகளின் மீது
தவழ்ந்து குழந்தையைப்
போல் விளையாடுகிறது..
காடுகளின்மீது சிறிது நேரம்
இருட்டுப் படுக்கையில்
ஓய்வெடுக்கிறது..
வயல்வெளியில்
வெளிச்சம் பாய்ச்சி
வெள்ளாமை செய்கிறது..
கடற்கரையில் நின்று
பார்த்தபோதுதான் தெரிந்தது
அதன் பயணம் கடலை
முத்தமிடவே என்று,
ஆம்!
அந்தத் தொடுவானம்
அது கடலைத் தான்
காதலிக்கிறது...
சித்தார்த்தனை
புத்தனாக்கியது
போதிமரம்...
____'__________"_______
நிலவு வருமுன்
வானம் வெட்கப்படுகிறது
அந்தி...
____________________________
கனவு இல்லங்களை
கனவில் மட்டுமே
காண்கிறார்கள்
நடைபாதை வாசிகள்
__________________________
குளத்தில் இறங்கி
வாரியத் தண்ணீரில்
வழுக்கி விழுந்தது நிலவு...
தொட்டுவிட நினைத்த.
வானவில்லோ எட்டாமல்
எங்கோ போய்விட்டது...
பாலைவனம் சென்று
கானல் நீர் பருகி
களைப்பாறவும் ஆசைதான்...
தூக்கத்தில் சிறு புன்னகையோடு
ஏறிஓட்டிய அரேபியக்குதிரை
தூக்கம் களைந்த போது
இறக்கைள் விரித்து
யூனிக்கார்ன் குதிரையாக
பறந்து சென்றது...
இதெல்லாம் விஞ்ஞானத்தின்
மாயைகள் என்று
அந்த ஐந்து வயது
அஞ்ஞானக்குழந்தை
அறிய வாய்ப்பில்லை....
_____________________