குழந்தையின் அஞ்ஞான ஆசைகள்

குளத்தில் இறங்கி
வாரியத் தண்ணீரில்
வழுக்கி விழுந்தது நிலவு...

தொட்டுவிட நினைத்த.
வானவில்லோ எட்டாமல்
எங்கோ போய்விட்டது...

பாலைவனம் சென்று
கானல் நீர் பருகி
களைப்பாறவும் ஆசைதான்...

தூக்கத்தில் சிறு புன்னகையோடு
ஏறிஓட்டிய அரேபியக்குதிரை
தூக்கம் களைந்த போது
இறக்கைள் விரித்து
யூனிக்கார்ன் குதிரையாக
பறந்து சென்றது...
இதெல்லாம் விஞ்ஞானத்தின்
மாயைகள் என்று
அந்த ஐந்து வயது
அஞ்ஞானக்குழந்தை
அறிய வாய்ப்பில்லை....
_____________________

எழுதியவர் : ரோகிணி (29-May-21, 7:20 pm)
பார்வை : 65

சிறந்த கவிதைகள்

மேலே