பொரியுருண்டை - நேரிசை வெண்பா

பொரியுருண்டை
நேரிசை வெண்பா

ச'ர்'த்திபித்த வாதந் தணியும் வலுத்தெழுந்த
சுத்தகப வாதந் தொலையுங்காண் - மெத்த
வரியுண்ட வேல்விழியாய் வையகத்திற் சாலிப்
பொரியுண்டை நன்றாம் புசி! 1426

- பதார்த்த குண சிந்தாமணி

பாகில் சேர்த்துப்பிடித்த நெற்பொரி வாந்தி, பித்தவாதம், கபவாதம், கபம் இவற்றை நீக்கும் .

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (31-May-21, 7:31 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 31

மேலே