பாயாசம் - நேரிசை வெண்பா

பாயாசம்
நேரிசை வெண்பா
’ர்’ ஆசிடையிட்ட எதுகை

பாயாசங் கொண்டாற் பழையமலம் வாந்திபித்தம்
ஆயாசம் போங்கூறில் அற்பமந்தந் - தூயசர்
வேந்திரிய நன்மை யெழில்வலிம னத்தெளிவோ(டு)
ஆ’ர்’ந்தபசி மேதையுமுண் டாம்! 1430

- பதார்த்த குண சிந்தாமணி

இதனால் மலக்கட்டு, வாந்தி, பித்தம், இளைப்பு இவை நீங்கும்;
.
அற்பமந்தம், பஞ்சேந்திரியங்கட்கு நலம்; அழகு, மனத்தெளிவு, தீபனம் இவை உண்டாகும் .

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (31-May-21, 7:50 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 27

மேலே