மூங்கில் இலை மேலே
கவி. பாளை பாண்டி அவர்கள் எழுத்து.காமின் சிறுகதைப் பிரிவில் தமது "செருக்கு ஔவையின் சறுக்கு யானைக்கும் அடி சறுக்கும்" என்ற சிறுகதையில் கூறியுள்ள ஏற்றப்பாட்டின் வரிகளான "மூங்கில் இலை மேலே…" என்றுத் தொடங்கி "வாங்கும் கதிர் ரோனே…" என்று வஞ்சி விருத்தப் பாவில் முடியும் நான்கு அடிகளை வைத்து மிதமுள்ள வரிகளை - நன்னாடன் ஆகிய நான் எழுதியது.
வஞ்சி விருத்தம் பா
மூங்கில் இலை மேலே
தூங்கும் பனி நீரே
தூங்கும் பனி நீரை
வாங்கும் கதிர் ரோனே ---- 1
---- ஏற்றப்பாட்டு
பாங்காய் வேலை செய்ய
நாங்கள் வரும் போது
ஓங்கி உயரே வந்து
தாங்கல் நீரை எல்லாம் ---- 2
அறிந்த மனிதன் செய்யும்
சிறந்த தவறைப் போல்
உறிஞ்சி குடித்து விட்டு
பறந்து போவது ஏனோ ---- 3
எளிய மக்களை சிதைக்க
தெளிவே இல்லா அரசுகள்
பளிரென போடும் திட்டமாய்
குளிரில் வராதது ஏனோ ---- 4
சேவல் கூவிய பின்பு
காவலாய் வரும் கதிரே
ஆவலாய் எழும் உயிரை
தாவலாய் பற்றியே வளர்ப்பாய் ---- 5
---- நன்னாடன்