ஒன்றிணைவோம் நாம் 

விடிந்தும் விடியாத அதிகாலை
ஆழ்கடல் அமைதியான நகரம்
சப்தங்கள் இல்லாத சாலைகள்
வெறிச்சோடிப் போன வீதிகள்
பறிக்காமல் வாடும் பூக்கள்
ஒலிக்காத வானொலிப் பெட்டிகள்
கேட்காத கீரைக்காரி குரல்
முகம் மறந்த அக்கம்பக்கத்தார்
மூடிய நிலையில் வாயிற்கதவுகள்
பசியோடு பறக்கும் பறவைகள்
நடுநிசியான மாலை நேரங்கள்
உழைக்கும் வர்க்கம் சோகத்தில்
பிணங்களின் வரிசை மயானத்தில்
நடுங்கும் உள்ளமுடன் மனிதர்கள்
அடக்கி வைத்துள்ளது கொரோனா
அடித்து விரட்டுவோம் அதை
அழித்திட ஒன்றிணைவோம் நாம்
ஒத்துழைப்பு அளிப்போம் அரசுக்கு !


பழனி குமார்
01.06.2021

எழுதியவர் : பழனி குமார் (1-Jun-21, 8:04 pm)
சேர்த்தது : பழனி குமார்
பார்வை : 167

மேலே