ராகம் தேடும் பல்லவி அவள்
ராகம் தேடும் பல்லவி அவள்
+++++++++++++++++++++++++++
வீணை தொடும்
விளரி இசையே/1
தேனின் இனிப்பும்
தேனிசை குரலே/2
வானை ஒளியாக்கும்
விண்வெளி நிலவே/3
வளையோசை ஒலிக்கும்
வானவில் நிறமே/4
சேனை காத்திடும்
சோலை இதயத்தில்/5
சுவர் தாண்டும்
பூனையாக அமர்ந்தவளே/6
அணை கட்டிய
அற்புதக் கற்பனை/7
கவிதை உருவெடுத்து
காகிதம் நிறைத்ததே/8
ராகம் தேடும்
ரகசிய பல்லவியே/9
சோகம் ஊட்டும்
சொற்களை பகிராதே/10
வெற்றிடம் புகும்
காற்றும் இசையாகுமே/11
மெளனமாகும் உதடுகளும்
சம்மதிக்கும் கீதமே/12
#யாதும்_ஊரே_யாவரும்_கேளிர்
#சமத்துவ_புறா_ஞான_அ_பாக்யராஜ்