மக்களும் சூழலும்

இனி வருங்காலங்களில் மருந்தே முதன்மையாகும்
உற்பத்தியாளர்களே நாட்டை ஆட்சியாளுவார்கள்
உயிரை முதன்மையாக்கி விலை வைக்கப்படும்.

உலகில் இனி வித வித நோய்கள் உண்டாக்கப்படும்
உணவைச் சார்ந்தே அனைத்தும் பரப்பப்படும்
உண்மைக் கூறுவோர்கள் அழிக்கப்படுவர்

ஊடகத்துறைகள் பயத்தினை எப்போதும் விதைக்கும்
விடியும் ஒவ்வொரு நாளும் நோயுள்ளதாக தோன்றும்
இதுவே சில ஆண்டுகளுக்கேனும் நிகழ்வாய் மாறும்

திரைப்பட நடிகரைப் போல் எல்லா நிகழ்வும் தோன்றும்
திருட்டும் புரட்டுமே அனைவராலும் கையாளப்படும்
தேவையில்லா உணவுகளே எங்கும் விற்கப்படும்

மக்களும் சூழலும் வசிப்பிடத்திற்கு பொருந்தாததாய்
கேடு உணவால் கெட்ட உணர்வுகள் தோன்றுமென்றும்
இவை யாவும் அரசாங்கங்களின் நனி ஒப்புதலுடனே.
------ நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (1-May-21, 4:34 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 62

மேலே