சூசையின் பாடல் - எண்சீர் ஆசிரிய விருத்தம்

சூசையின் பாடல்
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(கருவிளம், கருவிளம், புளிமா, கூவிளம் அரையடிக்கு)

வளைத்தன தனுக்கொடு வெழுவு மீர்க்கடை
..வடிக்கணை வினைப்பட வினையை யாக்கிய
விளைத்தன நசைக்கொடு விளையு நோய்த்திரள்
..விடப்பகை பகைத்தன பொறிக ளீர்த்துபு
திளைத்தன மிறைக்கொடு நசையு நீத்தவை
..செகுத்தொடு புதைத்திட வுரிய தாய்ப்பொரு
விளைத்தன திருக்கொடு வளரு மாட்சியை
..யியற்றிய முகிற்படர் மலையி னூக்கமே. 24

- பால மாட்சிப் படலம், முதற் காண்டம், தேம்பாவணி

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (8-May-21, 2:01 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 57

மேலே