என்று மாறுமோ பெண் அடிமைத்தனம்
பெண் அடிமைத்தனம்
இன்னும் தீரவில்லை
பணி புரியும் இடமோ
எதுவோ
எங்கும்
ஆடவர் அமர
பெண்டிர் கைகட்டி
வாய்பொத்தி
மடந்தைகளாக நிற்க
அவர்களோ
எங்கோ தேவலோகத்தில்
இருந்தே குதித்தவர்களாக
சொல்லில் வடிக்க இயலவில்லை
சொல்லாமல் இருக்க முடியவில்லை
பெண்ணாய் பிறப்பதோ
பேரிழப்போ இங்கே
அதிகார குரலில்
இம்சை அரசனாய்
எல்லாம் தெரிந்தவர்களாம்
ஏனிந்த அரக்கத்தனம்
என்று மாறுமோ
பெண் அடிமைத்தனம்