முடியுதடி

முடியுதடி
30 / 01 / 2025

காகிதத்தில் எழுதியதெல்லாம் காற்றோடு பறந்ததடி
வாக்கிலே சொன்னதெல்லாம் வழக்காகிப் போனதடி
சத்தியங்கள் கட்டம் மாறி சதுரங்கம் ஆடுதடி
ராஜாவை வீழ்த்திவிட்டு எகத்தாளம் பேசுதடி
கனவாக நம்வாழ்க்கை கரைந்தேதான் போகுதடி
நினைவாக உன்முகமோ நிலவொளியில் ஜொலிக்குதடி
உணவாக உன்நினைவுகள் உள்ளத்தை நிறப்புதடி
பிணமாக நடைதளர்ந்து என்வாழ்கை முடியுதடி

எழுதியவர் : ஜீவன் ( மகேந்திரன் ) (30-Jan-25, 8:12 pm)
சேர்த்தது : ஜீவன்
பார்வை : 83

மேலே