ஒட்டாமை
ஒட்டாமை
வானத்தில் வழி நடக்கும் நிலவினைப் போல
தாமரை இலையில் விழுந்த தண்ணீரைப் போல
தண்ணீரில் விழுந்த எண்ணை துளியைப் போல
மரத்தில் இருந்து விழுந்த இலையினைப் போல
அணிகலத்தில் இருந்து விழுந்த மணியைப் போல
மனிதனின் கண்ணில் இருந்து விழும் நீரைப் போல
தவிக்கும் தாய் விடும் அனல் மூச்சினைப் போல
மாதாவின் வாயில் வரும் சுடு சொற்களைப் போல
மனிதன் வெய்யிலின் ஒளியில் காணும் நிழல் போல
மக்கள் கண்களில் தெரியும் கானல் நீரைப் போல
வாழ்க்கையில் வரும் இன்ப துன்பங்களில் ஒட்டாமை நன்று

