மத்தாப்பு சிரிப்பு
தீபாவளி எப்போது வரும் என்று
ஒவ்வொரு வருடமும் ஆவலுடன் காத்திருப்பான்
அன்றுதான் அவள் முகம் பூரிப்பில்
அன்றலர்ந்த செந்தாமரையாய் ஜொலிக்கும்
'போனஸ் ' பணத்தில் அவன் வாங்கித்தந்த
புத்தம் புது வெள்ளி கொலுசு காலுக்கு
கழுத்திலோ சிக்கென்று சிங்காரித்த இரத்தின ஆரம்
'லாலாக்கடை ' காஜூ கத்திலி' வாயில் சுவைத்தர
சற்றே இருள் சேர்ந்த அந்திப்பொழுதில்
இன்பத்தின் உச்சியில் இருந்த அவள் சிரித்தாள்
முல்லைச்சரம்போல் .......இல்லை.....இல்லை
ஏற்றிவைத்த 'லயன்' பிராண்ட் மத்தாப்பு சரம்போல்
மயிலாய் ஆடி வந்தாள் எழிலாய் காலின்
புதிய கொலுசு கலீர் கலீரென ஒலிக்க
ரம்பாவோ ஊர்வசியோ இவள் என்று
அவன் எண்ணுவதுபோல் அருகில் சென்று
அவன் திறந்த வாயில் முத்தம் வைத்தாள்
சொர்கம் இதுவே என்று எண்ணினானோ ...
காணாமல் போனார் 'தீபாவளி காதலர்'...
எங்கோ ராக்கெட் போல் உயர்ந்து செல்லும்
தங்கம் வெள்ளி விலையிலும் கூட
அவன் அவளுக்கு அளித்த தீபாவளி பரிசு
இந்த தீபாவளி பரிசு அதற்கு அவள் தந்த பரிசு
குறுஞ்சிபோல் தீபாவளிக்கு மட்டும் அரிதாய்
பூக்கும் அந்த மத்தாப்பு சிரிப்பு