மனித முட்களே தடைகளாக
ஆயிரம் கற்பனைகளோடு
உயர உயர பறக்கின்றேன்
உயிர்வளி சுமந்து
வெண்பஞ்சு மேகங்களே
சிறகுகளாக கொண்டு
வியர்வைத் துளிகள் சிந்துகிறேன்
உழைப்பின் வெகுமதியாக
திடீரென ஒரு மின்னல்
சிறகுகள் கரைந்தது
மெல்ல மெல்ல கீழே
விழுகிறேன்
மனித முட்களே தடைகளாக