நானும் என் மகளும்
நானும் என் மகளும்...
இன்று நானும் என் மகளும் பேசுகையில்
உனக்கு பிடித்த அண்ணன்
யார் என்று கேட்க...
துரை என்றாள் சற்று யோசிக்காமல்...
சரி உனக்கு எந்த பெரியம்மா
பிடிக்கும் என்று கேட்க...
நொடி பொழுதில் வந்தது பதில்
ஜெயந்தி என்று.
சரி உனக்கு எந்த தாத்தா பாட்டி பிடிக்கும் என்று கேட்டு முடிப்பதற்குள்
அங்கேயும் பதில் மின்னலாய்
என் தாய் தந்தையை பிடிக்க என்றாள்
கடைசியாய் என்னை பிடிக்குமா அம்மாவை பிடிக்குமா என்று கேக்க
கொஞ்சம் யோசித்தவள்
மெதுவாய் சொன்னாள் அம்மாவை..
உன்னை பள்ளிக்கு அழைத்துச் செல்வது
திரும்ப கூட்டி வருவது
நீ கேட்டதை வாங்கி கொடுப்பது
என இத்தனை பாசமாய் நான் இருக்க
ஏன் அம்மாவை பிடிக்கும் என்கிறாய்..
என்று கேக்க
அதற்கு அவள்
அம்மா வேலைக்கு கிளம்புவதற்குள்
சமைத்து முடித்து என்னை குளிப்பாட்டி
எனக்கு சோறு ஊட்டி என்னை அழகு படுத்தி ஆடை உடுத்தி தயார் செய்பவர் அவள் தானே அதனால் பிடிக்கும் என்று
என் பாசமெல்லாம் வீண் தானோ என்று எண்ணி முடிப்பதற்குள் கட்டிப்பிடித்து
முத்தமிட்டால் கன்னத்தில்...
கோவமா என்று ...
செல்லக் கொஞ்சம் வேறு...
என் தாயின் சாயல் அவளிடம
சிரிப்பைத் தவிர பதில் இல்லை
என்னிடம்எனக்கு தெரியும்
என் மகளுக்கு என்னை பிடிக்கும் என்று..
அம்மாவுக்கு மகனும்
அப்பாவுக்கு மகளும்
அதுதானே பாசத்தின் உலகநீதி..