விதி வசத்தில் பாமரன்
வார்த்தைகள் மரணித்து போயின
சங்கிலி தொடராய் கனவுகள்
விலைவாசி உயர்வின்
விதிவசத்தில் பாமரன்
அஞ்சுக்கும் பத்துக்கும்
அல்லாடும் கூட்டம்
பேருந்து கட்டணம்
எட்டாதொலைவில்
நடந்து பழகிக்கலாம்
வாங்க எனும் வியாக்கியானம்
பள்ளிக்கு போகாத
பணத்துக்கு எங்க போறது
சேர்த்து வைக்க வேணாம்
சோத்துக்கு வேணுமில்ல
நொந்து நொந்து நூலா
போகும் மனசு
பச்ச தண்ணி தர நாதியில்ல
பரிதவிக்கும் வாய்க்கு
ஓட்டுகேட்டு வருவாங்க
ஓடா உழைப்பவனே
ஓட ஓட விரட்டு
துணிஞ்சு நில்லு எதிர்த்து நில்லு
நடுத்தெருவில நிறுத்து
நாளைக்கு மாற்றம் வர
நாடறிய சேதி சொல்லு!!!