கொல்லையில் வாழை மரம்
கொல்லையில் குலைத்தள்ளியது வாழை மரம்
குலையில் காய்கள் பருத்து பெருத்தன
பூவும் பெரியதானது
பூவோடு குலையோடு ஒரு வெட்டு....
காய்களும் பூவும் விலைப்போயின
இப்போது வாழை மரமும் வெட்டப் பட்டது
பட்டைகள் நீக்கி உள்ளிருக்கும் தண்டும்
நீக்கப்பட்டு தண்டும் விலைப்போனது
தன்னையே தந்து வாழவைக்கும் தியாகியானது
வாழை மரம்