நடிப்பு
![](https://eluthu.com/images/loading.gif)
சுற்றிலும் நாடக மனிதர்கள்
நடிப்பு நிறையவே இருக்கிறது
வசதியான மனிதரை
கண்டால்
வானளாவிய நடிப்பு
நாம் தான் இன்னும்
நடிக்க கற்றுக்கொள்ளவில்லை
அவர்கள் இன்னும் அதிகமாக
நடிக்க கற்றுக்கொள்கிறார்கள்
நடிப்பை உண்மையென
நம்பும் ஏமாளிகள்
இருக்கும் வரை
அவர்கள் நடித்துக்கொண்டேதான்
இருப்பார்கள்