எள்ளிய எட்டுக்கால்பூச்சி

என் வீட்டில்
குடியேறியது
என் அனுமதி இன்றி
வாடகை நான்
எவரிடம் வாங்க
வலைதானே
தட்டி எறிந்து விடவா
எவரையும் எறியும்
உரிமை உனக்கில்லை
எதுவும் இங்கே
நிரந்தரமில்லை
எள்ளி நகைத்து
காற்றிலாடியபடி
எனை பார்த்தது
கண்ணை உருட்டி
எட்டுக்கால் பூச்சி
எடுத்து அடுத்த அடி
வைத்தபடி......!