நிறங்களில் என்ன இருக்கிறது
நிறங்களில் என்ன இருக்கிறது
கருப்போ சிவப்போ வெள்ளையோ
மனிதர்களை போன்றே பூக்கள்
ஒவ்வொன்றும் ஒரு அழகுதான்
மொட்டோ மலரோ
பிறந்த குழந்தை போன்று
பட்டு வண்ண மேனியாய்
பார்த்தவுடன் ஓர் மின்னலாய்
கண்ணை காந்தமாய் இழுக்கும்
தொட்டு தொட்டு பார்க்க சொல்லும்
வாடை தென்றலாய் நாசிதனை உரசும்
உலகமே நம் வசமாய் தோன்றும்