மழையை காதலிக்கும் மானிடன் நான்

தேவதைகள் வானத்தில் இருந்து வருவாளோ - ஆனால்
என் தேவதை கார்மேகத்தில் இருந்து முத்துகளாய் எனக்காய் சிதறுகிறாள்
நான் கலங்கி நிற்கும் நிலையில்
அவளின் ஒரு துளியை
என்மேல் விழ வைத்து கலங்கிய என்னை தெளிய வைக்கிறாள்
என் கண்ணீர்த்துளிகளை
அவள் மழைத்துளியால் துடைக்கிறாள்
ஆயிரம் சிந்தனைகள் என்னில் அலைபாயும் போதும்
அழகிய மலர்கள் மேல் விழும் அவளை பார்க்க வைத்து என்னை பரவசமாக்குகிறாள்
விண்ணில் இருந்து மண்ணில் நான் உனக்காக தான் விழுகிறேன் என்னை ஏற்றுக்கொள் என்று ஏங்க வைக்கிறாள்
என் உடல் முழுவதும் நனைத்து என்னுடன் ஒன்றாகிவிடுகிறாள்
என் மேல் விழும் ஒவ்வொரு துளியிலும் நான் அவள் காதலை உணர்கிறேன்
மண்ணில் ஏதும் பார்க்காத காதலை நான் மழையில் பார்க்கிறேன்
அதனால் தானோ என்னவோ
மழையை காதலிக்கும் மானிடனாய் மாறிவிட்டேன்
காலம் உள்ள வரையில் கார்மேகம் தரும் மழைக்காதலுடன் கரைந்திட போகிறேன்