இரட்டைச் சடை கன்னேசு
யாருடா இது? கன்னேசா? உன்னைப் பாத்து
ஆறு மாசம் ஆகுது. ஆளு அடையாமே
மாறிப் போயிருச்சு. என்னடா ஆச்சு? காது
வரக்கும் தலையை மறைக்கும் தொப்பி.
முன் பக்கம் பாதி நெற்றியைத் தொப்பி
மறைக்குது. நீளமான இரட்டைச் சடை.
இதெல்லாம் என்னடா கோளம்?
@@@@@@@@
அதேண்டா கேக்கிற? தலை வழுக்கையை
மறைக்கத்தாண்டா இந்த வேசம். என்னோட
இந்த வேசத்தப் பாக்கறவங்க இதைப் புது
"புது நாகரிகம். நல்லா இருக்குதுன்னு
பாராட்டறாங்கடா. ஒரு நாளைக்கு
இரட்டைச் சடை. அடுத்த நாள் நீளமான
முடியைத் தொங்கவிட்டுக்குவேன். இப்ப
என் தலை அலங்காரத்தைப் பார்த்து
வழுக்கை ஆசாமிகள் எல்லாம் என்னோட
நாகரிகத்தை பின்பற்ற ஆரம்பிச்சுடாங்கடா
ஆவேசு.
@@@@@@@
பரவால்லடா. நீ ஒரு புது நாகரிகத்தின்
தந்தைடா கன்னேசு.