வைபவம்
வைபவம்
வந்தார்கள் அமர்ந்தார்கள்
கவரிங் அமர்வில்
பணிவான அழைப்பை ஏற்று…..
கட்டி தழுவிக் காட்டிக்கொண்டார்கள்
சிரித்துக் கொண்டே !
உற்று பார்த்தார்கள்
வழிவிட உட்கார்ந்து அங்கும் இங்கும் !
எட்டிப் பார்த்து ஏமாந்து போகமலிருக்க…
தெரிந்தவர் யாரும் இருக்கிறார என பார்த்து !
வந்த காரியம் முடிந்த தருணம்
மாசில்லா மேடை
மங்களமாய் அழைக்க
மஞ்சள் அரசி ஆதாரனை
பாராட்டு பலபேர் பலவார் தெரிவிக்க
சிலபேர் பாரா அணிவகுப்பு …….. தொடர்ந்து
வாயடைத்த வாய்க்கு விருந்து வைபவ அரங்கேற்றம்
நின்றவர் தின்றவர் யாவரும்
திறளாய் சென்றனர்
வந்த வழி வசிதியாய் விரிந்து காட்ட…!
ஓய்ந்த சத்தம் ஒருவழி நினைவுகூற
ஒற்றையர் இருவர் ஒட்டி நடந்தனர்
உறவினர் வாயார வாழ்த்திட !
ஒற்றையாய் சென்ற நானும்
வெருங்கையோடு வீடு வந்து சேர்ந்தேன்
விருந்து சாப்பிட மறந்து !
சொந்தபந்த சொதப்பல் இல்லா களிப்பில் !