அமைதிப் பூக்கள்
அமைதிப் பூக்கள் அள்ளித் தூவட்டுமே
அன்பை விதைக்கட்டுமே.
வெடிக்கும் குண்டுகளின் சப்தம் நிற்கட்டுமே.
மண்ணில் கொட்டும் இரத்தம் நிற்கட்டுமே.
குருதிப்புனலைப் பருகிய உடம்பில் வெறியும் தனியட்டுமே
உடலைச்சிதைக்கும் போர்கள் நின்று
உயிர்கள் தலைக்கட்டுமே
எரித்தே கொள்ளும்
ஏவுகனைகள் தாவுவதை நிறுத்தட்டுமே.
வெடிக்கும் தோட்டாக்கள்
பூ ஆரமாய் வந்து
உடலை தழுவட்டுமே
யுத்தத்தில் வந்த இரத்தம் நிற்கட்டுமே
உயிரைக்குடிக்கும் யுத்தம்
உறங்கட்டுமே
தறுமோ யுத்தம் திரும்பி உயிரை
திறக்;குமோ பகையை
தாங்குமா உலகம.;
வெட்டிய உடல்கள்
துடிதுடிடத்தே தாவுது
நோவுது மனசும்
எடுக்க எடுக்க பிணக்குவியல்
வெட்டிய இடமெல்லாம்
வடிந்;தே ஓடுது
குருதி ஆறு.
குருதிபுனலில் குளித்தது
பூமி
குண்டுமழையில் குடும்பமே அழியிது
ஒரு நொடியில் அனாதையானது கோடி.
நண்டும் சின்டும் அனாதையாகுது
நளிந்தே பட்டிணியில் சாகுது.
கொட்டிய கோபத்தில்
வெட்டிய உடலிருந்து
விட்டே ஓடுது உயிரு.
நடுங்கும் போர்களத்தில்
நாயும் பேயும் எலும்பையும் சதையையும் தேடுது.
எல்லைச் சண்டையோ
எலும்புக்குச் சண்டையோ
ஏகாதிபத்திய சண்டையோ
இனப்படுகொலையோ
ஈவு இரக்கம் இல்லாத
பாலியல் படுகொலையோ
பாவமோ பகையோ
பார்க்க சகிக்கலையே
தாலியறுத்த மாந்தர்கள்
நாதியத்து கிடப்பதைப்பார்.
அழகாய் ஓடிய நதியில்
இரத்தவாடை அடிப்பதைப்பார்.
அழுகிய பிணங்களும்
அடுக்கடுக்காய் கிடக்கும் சடலங்களும் கிடப்பதைப்பார்
யார் தந்த சாபமோ
தாங்கியது பூமி
கண்ணீர் விட்டு
கதருது சாமி.
சோகத்தில் துடிக்குது மனித இனம்.
சொந்தத்தைத்தேடியே கண்ணீர்வடிக்குது மனித இனம்.
சொத்து சுகம் சொந்தத்தை விட்டு ஊர்மாறிப்போகுது.
தொட்ட உறவு எல்லாம் தொடர் அறுத்து போகுது.
என்ன யுத்தமோ
ஏன் இந்த குண்டுகளின் சப்தமோ.
நிற்கட்டும் யுத்தம்
இனி உனக்கெதற்கு
இரத்தம்.
அமைதிப் பூக்கள்
கசங்காது மீண்டும் மலரட்டும்.
கண்ணீர் வடிக்காது
இதயங்கள் சிரிக்கட்டும்.
குண்டு மழைபொழியாது
அமைதியில்
பூமியும் நனையட்டும்
அன்பை பூமி தழுவட்டும்.
வந்தே அமைதியும்
உறங்கட்டும்
சுதந்திர பூமியில்
சுகமாய் பறவைகளும்
திரியட்டும்
தரிகட்ட மனிதக் கூட்டம்
மறுபடியும் அகிம்சைவழியில் வாழட்டும்.
பாசம் மீண்டும் படரட்டும்
பாவம் கழிந்து
புன்னியம் தொடரட்டும்.
குண்டு மழைபொழிந்;தது
ஒடுங்கட்டும்.
அன்பு மழை பொழியட்டும்
பாசப்பயிர்கள் வளரட்டும்
மனித நேயத்தில்
மக்கள் ஒன்று சேரட்டும்
அமைதிப் பூக்கள் மீண்டும் பூக்கட்டும்
அ. முத்துவேழப்பன்