குழந்தை

பேருந்து பயணத்தில் ஓர் குழந்தை
சுருள் சுருளாக கேசம்
முகத்தில் இல்லை வேசம்
அணிந்திருந்தது முககவசம்
அமர்ந்திருப்பது அன்னையின் கைவசம்
நெற்றியில் கருஞ்சாந்து பொட்டு
கன்னத்தில் திருஷ்டி இட்டு
கண்களுக்கு அஞ்சனமை எழுதி
கால்களில் சலங்கை பூட்டி
குட்டி தேவையாய்
மழலை பேச நானும்
மழலையோடு மழலையானேன்....

ஜோதிமோகன்

எழுதியவர் : ஜோதிமோகன் (10-May-21, 11:35 am)
சேர்த்தது : ஜோதிமோகன்
Tanglish : kuzhanthai
பார்வை : 8573

மேலே