பனைமரம்
கன்னங்கரேலென்ற
சரீரமாம்
தலையிலே பச்சை
இலை கிரீடமாம்
பந்து பந்தாக
பனங்காய்களாம்
பருவமாக வெட்டினால்
சூடு தணிக்கும் நூங்கு
தவறினால் பனம்பழமாம்
கருத்த உன் தேகம்
கிளிகளின் வீடாம்
உன் உதிரம்
பக்குவமாய் வடித்தால்
பதனீராம் அருந்திய
தேனீக்கள் சுவையில் மயங்கும்
பதம் தப்பினால் பனங்கள்ளாகும்
மனிதருக்கு போதை தரும்
நிலத்தடி நீரை தக்கவைக்கும்
நீ கற்பகத்தரு....