கறி சோறு
வருடத்தில்ஒருமுறை தான் திருவிழா
ஊர் கூடும் ஒரு விழா
மாமன் மச்சான் மாமன்பொண்ணு
முறை மாமன் மஞ்சத்தண்ணீர்
ஆடல் பாடல் என அனைவரும் ஆனந்தமடையும் திருவிழா
கெடா வெட்டி படையல் போட்டு
வரிசையாக இலையைபோட்டு
இலமேல சோறு போட்டு
சோறு மேல கறியை போட்டு
ரெண்டு கறி துண்டு கூட போடு
எனச் சண்டை போட்டு
சொந்த பந்தம் மகிழ
வயிறு குளிர
திருவிழா கறிசோறு
தின்று நீயும் பாரு. .
ஜோதிமோகன்