ஏன் வேண்டும் தமிழ்த்தாய் வாழ்த்து - கவிஞர் இரா இரவி

ஏன் வேண்டும் தமிழ்த்தாய் வாழ்த்து?

- கவிஞர் இரா. இரவி

*****

இந்தியாவிற்கு தேசிய கீதம் எப்படியோ
அப்படித்தான் தமிழ்த்தாய் வாழ்த்து தமிழ்நாட்டிற்கு

மொழி வாழ்த்து என்பது மொழியை உயிர்ப்பிக்க
மொழி வாழ்ந்தால் இன்னும் வாழும்

சாதி மத வேறுபாடுகள் இன்றி
சகலரையும் ஒருங்கிணைக்கும் வாழ்த்து

மடாதிபதி எழுந்திருக்காமல் இருந்தார்
மோனத்தில் தவத்தில் இருந்ததாக பொய் உரைத்தார்

அரசு இயற்றிய புதியதொரு சட்டம்
அனைவரும் எழுந்து நிற்க வேண்டுமென்று

வேறுவழியின்றி எழுந்து நிற்க வைத்தது
வேறு சில வரிகளையும் பாட விட்டனர்

ஏற்கனவே சில ஏடுகள் நீக்கியது தான்
இன்னும் சில வரிகள் தவிர்த்தது தவறு

தமிழின் அருமை பெருமை உணர்த்தும் பாடல்
தமிழரை உலகளாவில் ஒருங்கிணைக்கும் பாடல்

அரசு விழாக்களில் தவறாமல் ஒலிக்கும் பாடல்
அனைவருக்கும் மகிழ்ச்சியை வழங்கிடும் பாடல்

பள்ளியிலிருந்து பயிற்றுவிக்கும் பாடல்
பலருக்கும் மனப்பாடம் அறிந்திட்ட பாடல்

போப் ஆண்டவர் மாளிகையில் அனைவரும்
பைந்தமிழ் வாழ்த்தை அழகாக பாடினார்கள்

அனைவரும் விரும்பிப் பாடி வாழ்த்துவோம்
அனைவரும் தமிழர் என்று மெய்ப்பிப்போம்

எல்லோரும் புரிந்திட அறிந்திட வேண்டும்
ஏன் வேண்டும் தமிழ்த்தாய் வாழ்த்து என்பது

எழுதியவர் : கவிஞர் இரா.இரவி. (29-Dec-24, 7:09 pm)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 14

மேலே