ஒரு நாள் சுரம்
ஒரு நாள் சுரம்
கை கால்கள் இருந்தும் அவை தளர்ந்து வலுவிழக்க
கண்கள் தீக்கனலாய் எரிந்து தன்னை மூட வைக்க
உடம்பு வெய்யில் கால தணல் எனக் கொதிக்க
உள்ளிருக்கும் சளி இருமல் வடிவில் தொல்லை கொடுக்க
உமிழ் நீரும் முழுங்க முடியாமல் உள்செல்ல மறுக்க
உடன் இருப்போர் யாவரும் வேதனை யுடன் பார்த்திருக்க
என்ன வந்தது எனக்கு என்று மனம் நினைத்து புலம்ப
மனையாளின் மருந்தினால் உடம்பு கொஞ்சம் தேறிட
இறைவன் நமக்கு கொடுத்த பசி வயிற்றில் வந்தவுடன்
வாயும் கண்களும் தவித்தது ஒரு கவள அன்னத்தை தேடியே...