நல்லருட் குற்றால நாதனைப் பாடினேன் - கலித்துறை

கலித்துறை
(கூவிளம் காய் கூவிளம் கூவிளம் காய்)

நல்லருட் குற்றால நாதனைப் பாடினேன்
..நன்குறவே;
கல்விநூல் கற்றிடவே காதலில் வீழ்ந்தனன்
..கசிந்துருகி!
சொல்வளம் மிகுந்திடவே சுற்றினேன் கால்களிற்
..சுடரெனவே;
கல்விமான் அவன்காதில் கழறினேன் என்குறை
..காணெனவே!

- வ.க.கன்னியப்பன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (30-Dec-24, 8:09 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 14

மேலே