என்னசொல்லி நான்மகிழ்வேன் இன்று - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
மெல்லிதழ் தாமரையோ மேனியில்பூச் செண்டிரண்டோ
சொல்லிடுவாய் பெண்பாவாய் சொக்கிநின்றேன் – மெல்லிடையாள்
என்னுடனே வந்துநின் றென்றனையே காத்திடுவாய்;
என்னசொல்லி நான்மகிழ்வேன் இன்று!
- வ.க.கன்னியப்பன்