கதிரருக்கும் வேலையில

கதிரருக்கும் வேலையில
வாய்க்கா வரப்பு ஓரத்துல
என்ன களவாடி போறவளே சின்ன புள்ள
கொஞ்சம் பொறு உன் கூட நானும் வரேன்

கதிரருக்கும் மாமனுக்கு
கஞ்சி கொண்டு வந்ததில்ல
வீச்சருவா வீரனுக்கு
வெட்டி கதை தேவையில்ல

பரிசம் போட்டா மாமனுக்கு
மொத்தமாய் சொந்தம் இந்த புள்ள
உன் விருப்பு வெறுப்பு தெரியாம
எப்படி நான் பரிசம் போட சொல்லு புள்ள

பிடிக்காம சிரிப்பேனா இல்லாம மறைப்பேனா
பொண்ணு மனசு புரியலையே இந்த
புத்தி கெட்ட மாமனுக்கு...
எங்க ஊரு வீரனுக்கு

இந்த வார்த்தை போதும் புள்ள
எனக்கு உன்ன பரிசம் போட
சீக்கிரமே நானும் வரேன்
தங்க தாலி செய்யப் போறேன்

காத்திருடி சின்ன புள்ள
கதிரருக்கும் வேலை முடிக்க
தை மாதம் கூடி வர
என் தங்க தாலி உன் கழுத்தில் ஏற

எழுதியவர் : ருத்ரன் (6-Feb-25, 5:37 am)
பார்வை : 35

மேலே