பார்வை ஏவுகணை

பார்வை ஏவுகணை
++++++++++++++++++++
கதிரவன் உதித்தால்
காலை உதயமாகும்
மதியவள் விழித்தால்
மாலை விடைபெறுமே

மாதின் பார்வையில்
காதலும் பிறக்கும்
சாதிகள் ஒழியும்
காதலர் இணைந்திடவே

ஏவுகணை ஏவினால்
சேரும் இடம் தெரியாது
அவளது பார்வை கணைகள்
சேரும் யென் இதயத்தையே

உள்ளம் கலந்து
உயிர் இணைந்திடவே
கடல் நீர்
குடிநீர் யானதாக மகிழ்வே

#யாதும்_ஊரே_யாவரும்_கேளிர்
சமத்துவ புறா. ஞான. அ.பாக்யராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ் (6-Feb-25, 6:40 am)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 2

மேலே