பாவாலா காவாலா
வத்தலாம்பட்டி ஊர் சபைக்கூட்டம். தலைவி
வந்ததும் அனைவரும் எழுந்து நின்று
"வணக்கம் அம்மா" என்று கூறுகிறார்கள்.
@@@@
வணக்கம். எல்லோரும் உட்காருங்கள்.
நமது வத்தலாம்பட்டியில் இந்த்திப் பெயர்
இல்லாதவர்கள் யாரும் இல்லை. என்
பெயர் எல்லம்மாள் என்பதைக் கூட நான்
'எல்ஜி'னு மாத்திட்டேன். நம்ம ஊரில்
தமிழ்ப் பெயர் வைக்கப்பட்டுள்ள யாருமே
இல்லை என்பதை எண்ணிப்
பெருமைப்படுகிறேன். எனக்கு உள்ள பல
குறைகளில் இதுவும் ஒன்று. அதாவது
யாரும் அவுங்க குழந்தைக்கு 'வாலா' என்று
முடியும் இந்திப் பேரை. வைக்கவில்லை.
@@@@@@
(எல்லோரும்)' ஆமாம், ஆமாம்.
@@@@@@
அதை விரைவில் நிவர்த்தி
செய்யவேண்டும். இந்த வாரம் ஆண்
குழ்ந்தைக்குத் தந்தையானவர் யாராவது
இருந்தால் கையை உயர்த்தவும்.
@@@@@@@@
(இரண்டு இளைஞர்கள் கையை
உயர்த்துகிறார்கள்)
@@@@@@@@@
மிக்க மகிழ்ச்சி. கன்னாஜி, உன்
பையனுக்கு 'காவாலா'னு பேரு வைடா.
டேய் பாப்ஜி, உன் பையனுக்கு
'பாவாலா'னு பேரு வைடா.
@@@@@@@@
(இருவரும்): நீங்க கூறிய பேருங்களையே
எங்கள் குழந்தைகளுக்கு வைக்கிறோம்
அம்மா.
@@@@@@@@
மிக்க மகிழ்ச்சி. இத்துடன் நமது
வத்தலாம்பட்டி ஊர் சபைக் கூட்டம்
கலைகிறது.