காதல் என்பது

"காதல் என்பது"

இது ஒரு சிறிய கவிதை தொகுப்பு.

30 அத்தியாயங்களை கொண்டது.

"படைப்பாளியின் கண்ணோட்டம்"

காதல் அனுபவம் இல்லாவிடினும்
காதலைப் பற்றிச் சொல்லிவிட்டேன்

இது புதுமை வாய்ந்த காதல் கவிதை

பெயரில்லாமல் கதாபாத்திரங்கள்
உலா வருவது, புதுமை அனுபவம்

"அவன்",

"அவள்"..... என்றே

எடுத்துச் செல்கிறேன் இக் கவிதை முழுவதும்

அவனும், அவளும் தனித்தனி நபர்கள்
என்றே தொடங்கும் என் கவிதையும் இங்கே

விழிகளின் கதிர் ஒளியால் உண்டான காதல்
புரிதல் இல்லாத பக்குவக் காதல்
புரிதல் வந்ததும் புனிதக் காதல்
அறிவும், மனமும் கொண்டாடிய காதல்
உள்ளார்ந்த அன்பால் எழுந்த காதல்
சமயோஜிதமாய்ச் செல்கின்ற சில்லென்ற காதல்
அதனால் இருவர் வீட்டிலும் வென்ற காதல்
உறவால் சற்றே மிரண்ட காதல்
அதன் குழப்பத்தால் கொஞ்சம் பிசகிய காதல்
குழப்பம் இருந்தால் தெளிவு உண்டு
என்று உணர்ந்த காதல்
நட்பிடம் ஜாலியாய்ப் பகிர்ந்த காதல்
கள்ளம் கபடம் இல்லாக் காதல்
எல்லைக்குள் வலம் வந்த தூய்மையான காதல்
முடிவாய்த் திருமண பந்தத்தில் நுழைந்த காதல்

இதைப் படித்துப் பார்த்து அனுபவம் பெறுவீர்
இக்கவிதையின் சாராம்சத்தை உணர்ந்து கொள்வீர்
பின், இதுபோல் காதல் செய்வதை உறுதிப்படுத்துவீர்
காதலை வாழ்த்துவீர்

ஆனந்த் சுப்ரமணியம்

(தொடரும்)........

எழுதியவர் : ஆனந்த் சுப்ரமணியம் (30-Dec-24, 6:52 am)
Tanglish : kaadhal enbathu
பார்வை : 29

மேலே