நடிகர் நெல்லை சிவாவும் மாண்டார்
நெல்லைத் தமிழால் துள்ளலாய் பேசிய
நகைச்சுவை நடிகர் சிவாவும் இறந்தாரே
சிரிக்கும் கலையில் சிறப்பாய் இருந்தே
கிடைக்கும் வாய்ப்பில் துடிப்பாய் நடித்து
கிணற்றை காணோம் என்றே தேடியும்
இம்சை அரசனில் இரட்டை புலவராய்
பற்பல படங்களில் பட்டையை கிளப்பிய
நம்முடைய வீட்டின் அருகிலான நபராய்
அழகாய் காட்சித் தருகின்ற ஆற்றலான
நடிகர் நெல்லை சிவாவும் மாண்டார்
இன்றே (11.05.2021) மாரடைப்பு நோயால்
கொடுமை நோயாம் கிரீடக் கிருமியின்
பரவல் காரணமாய் இறப்பதும் கொடுமையே.
----- நன்னாடன்.