இளவல் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : இளவல் |
இடம் | : மணப்பாடு |
பிறந்த தேதி | : 02-Nov-1975 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 10-Aug-2018 |
பார்த்தவர்கள் | : 2423 |
புள்ளி | : 98 |
இயல்பாக இருக்கிறேன் என்று நினைத்துக்கொண்டு இயல்பில்லாமல் இருப்பவன்
பித்தன் தெருவில் இறங்கி நடந்து கொண்டிருந்தான்
கற்களை எடுத்து அவனை நோக்கி வீசினார்கள்
பித்தன் நின்று பதிலுரைத்தான்
உங்கள் கற்களால் எனக்கு எந்த காயமும் உண்டாகாது
நான் உங்கள் கற்களுக்கானவன் அல்ல
உங்களின் சொற்களுக்கானவன்
சேகரிக்க முடிந்த உங்கள் கற்களை விடுத்து
சேகரிக்க விரும்பாத சொற்களுக்காக வந்தவன்
உங்கள் சொற்களும் என்னை காயபடுத்த முடியாது
பித்தன் படியில் உறங்கி கொண்டிருந்தான்
பக்கத்தில் நாய் குரைத்துக்கொண்டிருந்தது
அருகில் உறங்கியவர்கள் விழித்தார்கள்
பித்து பிடித்துவிட்டது பித்தனுக்கு
இவ்வளவு நாயின் சத்தத்திலும்
எப்படி உறங்குகிறான் பார் என்றார்கள்
பித
துரித உணவுகள் தெருவெங்கும் பெருகியதால்
துக்கந்தரும் நோய்கள் தோளை தழுவலாச்சே
நீரில் அமிலஞ்சேர்த்து யாவருக்கும் வழங்கியதால்
குருதியில் எதிர்ப்புத் தன்மை குறுகி ஒடுங்கலாச்சே
மானத்தின் மதிப்பது மனதினில் குறைந்ததால்
மனிதனின் மகத்துவம் மாற்றமடைந்து சிதையலாச்சே
நாட்டுக்குரிய உடைகளில் நாகரீகம் புகுந்ததால்
நலங்காக்கும் நற்பண்புகள் நலிவுற்று சிதையலாச்சே
பணத்தின் மீதான பற்றின்பலம் பயங்கரமானதால்
பரிதவிப்போர் மன எண்ணங்கள் பரிகாச பொருளாச்சே
உணவுகளில் கலப்படங்கள் ஊடுறுவல் பெருகியதால்
உடல்களின் உறுதி தன்மை உடைந்து நொறுங்கலாச்சு
உடையவைகளில் உள்ளதை உளமாறக் கூறினாலும்
உள்ளவைகளை உடையாக்கும் உலகமாந்தர
வார்த்தைகளை தேடி மனம் முழுக்க தவம்
கிடைத்த வார்த்தைகளில்
சந்திப்பிழைகள் சண்டைபிடிக்கிறது
சாமர்த்தியமனது வேறு வார்த்தைகளை
தேடுகிறது தவறுணராமல்
கருத்துக்கள் கண்விழிக்கும்போது
உவமைக்குழந்தை ஊமையாகிவிடுகிறது
பாத்திரம் கழுவும் போது கிடைத்த சந்தத்தில்
பொருத்த முனைகையில்
சாத்தியமற்றுப்போன வார்த்தைகளை
கொண்டு எதை எழத
நான்கடி எடுத்து வைத்தபின் கீழே விழும்
மழலையின் நிலைதான்
கருத்தும் உவமையும்
கருத்து வேறுபாடு கொண்ட காதலர்களாய்
தனித்தே வருவேன் என்று அடம்பிடிக்கும்போது
எப்படி எழுத
பஞ்சமற்ற தமிழுக்குள்
மஞ்சம் கொண்ட வார்த்தைகள் ஏராளமிருந்தும்
கொஞ்சமேனும் தந்தால்தானே
எஞ்சி
வார்த்தைகளை தேடி மனம் முழுக்க தவம்
கிடைத்த வார்த்தைகளில்
சந்திப்பிழைகள் சண்டைபிடிக்கிறது
சாமர்த்தியமனது வேறு வார்த்தைகளை
தேடுகிறது தவறுணராமல்
கருத்துக்கள் கண்விழிக்கும்போது
உவமைக்குழந்தை ஊமையாகிவிடுகிறது
பாத்திரம் கழுவும் போது கிடைத்த சந்தத்தில்
பொருத்த முனைகையில்
சாத்தியமற்றுப்போன வார்த்தைகளை
கொண்டு எதை எழத
நான்கடி எடுத்து வைத்தபின் கீழே விழும்
மழலையின் நிலைதான்
கருத்தும் உவமையும்
கருத்து வேறுபாடு கொண்ட காதலர்களாய்
தனித்தே வருவேன் என்று அடம்பிடிக்கும்போது
எப்படி எழுத
பஞ்சமற்ற தமிழுக்குள்
மஞ்சம் கொண்ட வார்த்தைகள் ஏராளமிருந்தும்
கொஞ்சமேனும் தந்தால்தானே
எஞ்சி
புதிய இந்தியா
பூகம்பமின்றி பூமி குலுங்கி
அடிக்காத காற்றில் மரங்கள் சாய்ந்து
புயலற்ற வெளியில் வேரறுந்த செடிகளும்
வெயிலின்றி வற்றிப்போன ஆறும்
வெடியின்றி தகர்ந்த மலைகளும்
கைபடாது அழிந்த கற்பும்
புதிய இந்தியாவில் சாத்தியமே
அக்டோபர் ஒன்று
நாளையாவது மீண்டும் ஒருமுறை
பிறந்துவிடு
இல்லையேல் ருபாய் நோட்டிலோ அல்லது
நாணயத்திலோ ஒருமுறையேனும் அழுது காட்டு
அப்போதாவது
நீ வாங்கித்தந்த விடுதலை
வதை படுவதை உணர்கிறார்களோ
பாப்போம்
லைவின்
அக்டோபர் இரண்டு
அந்தக் கண்ணாடிக்காரனின்
கனவுகளின் வேர்களில்
அமிலம் அரித்துக்கொண்டிருப்பதை
அறியாமலே
செடியின் மேல் முளைத்த ரோஜாவை
முள்கிழித்த கைகளால்
தடவிக்கொண்டிருக்கிறோம்
அங்கே அவன் அழுது கொண்டிருப்பதை
அறியாமல் மறைக்கவே
காகித பணத்தில் கண்ணாடி அணிந்து
சிரிக்க வைத்தோம்
ஏதேனும் ஒரு படியில் அந்த மாகாத்மாவை மறந்துவிடும்
பயத்தில் சாதுர்யமாக பணத்தோடே
பயணிக்க வைத்தோம்
ஆனால் வழியில் வரும் வலிகளில்
அவனை மறக்கவும் கூடும்
வரிகட்டாது வீடு கட்டி குடியிருக்கும்
தூக்கனாங்குருவி கண்டு தேசத்தின் கூரைகள் நொருங்கி விழுகிறது
சாலை வரிகட்டாது பாம்பு ஒன்று
சுங்கச்சாவடியை கட
அக்டோபர் இரண்டு
அந்தக் கண்ணாடிக்காரனின்
கனவுகளின் வேர்களில்
அமிலம் அரித்துக்கொண்டிருப்பதை
அறியாமலே
செடியின் மேல் முளைத்த ரோஜாவை
முள்கிழித்த கைகளால்
தடவிக்கொண்டிருக்கிறோம்
அங்கே அவன் அழுது கொண்டிருப்பதை
அறியாமல் மறைக்கவே
காகித பணத்தில் கண்ணாடி அணிந்து
சிரிக்க வைத்தோம்
ஏதேனும் ஒரு படியில் அந்த மாகாத்மாவை மறந்துவிடும்
பயத்தில் சாதுர்யமாக பணத்தோடே
பயணிக்க வைத்தோம்
ஆனால் வழியில் வரும் வலிகளில்
அவனை மறக்கவும் கூடும்
வரிகட்டாது வீடு கட்டி குடியிருக்கும்
தூக்கனாங்குருவி கண்டு தேசத்தின் கூரைகள் நொருங்கி விழுகிறது
சாலை வரிகட்டாது பாம்பு ஒன்று
சுங்கச்சாவடியை கட
கவிதை போட்டிக்காக எழுதியது..---------------------------------------------------கவிதைகளில் கலைச்சொற்கள்---------------------------------------------கீழ்க்கண்ட இலக்கிய சொற்கள் கவிதையில் இடம் பெற வேண்டும்._-------------- ------1. *கவ்வை* - பழிச்சொல்2. *காழகம்* - ஆடை 3. *குரம்பை* - குடிசை 4. *சகடம்* - வண்டி5. *சிற்றில்* -விளையாட்டு வீடு6. *ஓர்வு* - சிந்தனை 7. *கங்குல்* - இரவு8. *அசும்பு* - சகதி9. *அத்தம்* - வழி, காட்டுவழி, பாலைவழி10. *அயில்* - உண், பருகு, குடி11. *அல்கல்* - நாள்தோறும்12. *உறவி* - எறும்பு-------------------------------------விதவையின் ஒரு நாள்------------------------------கணவனை இழந்
---------
தொலைவில் தெரியும்
தென்னையின் அழகு
அருகில் தெரிவதில்லை..
அருகில் தெரியும்
ரோஜாவின் அழகு
தொலைவில் தெரிவதில்லை..
இளமையில் இருக்கும்
முகத்தின் அழகு
முதுமையில் இருப்பதில்லை..
சிலர் மனதில் இருக்கும்
அகத்தின் அழுக்கு
முக அழகில் தெரிவதில்லை..
பலர் மனதில் இருக்கும்
அகத்தின் அழகு
முக அழுக்கில் தெரிவதில்லை..
அழகாய் இருக்கும்
அழகுகள் யாவும்
அழகுடன் முடிவதில்லை...
நிரந்தரமில்லா அழகை
எண்ணி தன்னிலை
தடுமாற தேவையில்லை..
அழகை நினைத்து
அகங்காரம் அடைய
ஆண்டவன் விடுவதில்லை..
---------------
சாம்.சரவணன்
வெற்றி என்பது எதுவென்று நோக்கின்
விரும்பியதை நாடி அடைவது ஆகும்
விரதம் என்பது எதுவென்று அறியின்
விடாமல் வெற்றியை நாடுவது தானாம்
கொள்கை என்பது எதுவென்று கேட்பின்
உடையதை வைத்து வெல்வது தானாம்
கடமை என்பது எதுவென்று தெளியின்
கண்டவர்கள் மெச்சும் செயல் முடிவு தானாம்
உரிமை என்பது எதுவென்று ஆய்வின்
நமக்கென ஒதுக்கிய விலகா எதுவும்
தகுதி என்பது எதுவென்று பார்க்கின்
தடமாறாமல் நின்று முடிப்பது தானாம்
உண்மை என்பது எதுவென்று காண்கின்
உறுதியாய் நல்வழியில் செல்வது தானாம்
படிப்பு நமக்கு எதைக்கொடுக்க வேண்டுமென்றால்
பாதகம் செய்யா எண்ணத்தையேயாம்.
------- நன்னாடன்
கானகமே கவனம் தேவை
இலை தழுவும் காற்றை மேலும் கீழும் ஆடி தாலாட்டியது கிளைகள்
இரவின் இமைமூடலில் சிந்திய பனித்துளி
இலைமீது தவழ பகலவன் வந்து முகம் பார்த்து சரிசெய்தான்
நாணிய இலையால் நழுவிய பனித்துளி
புற்களின் நுனியில் பாரதியின் தலைப்பாகையாய்
முடியுமா என்று முறைக்கும் மான்களும்
வெறியுடன் வெறித்துபார்க்கும் சிங்கமும்
தத்தை பாடும் கிளியும் தாவித்திரியும் குரங்கும்
மெத்தை விரித்த புற்களும்
சின்ன சின்ன குருவிகளும்
மேகம் தவழும் மலைகளும்
தாகம் தீர்க்கும் நதிகளும்
சாபம் போக்கும் சக்திகளே
மனிதர்களற்ற மாநகரம்
அணில் சொன்னது அமைதி கொள்ளுங்கள்
கட்ட வண்டிக்காரனின் காலடிச்சத்தம் கேட்க