எது அழகு

---------
தொலைவில் தெரியும்
தென்னையின் அழகு
அருகில் தெரிவதில்லை..
அருகில் தெரியும்
ரோஜாவின் அழகு
தொலைவில் தெரிவதில்லை..
இளமையில் இருக்கும்
முகத்தின் அழகு
முதுமையில் இருப்பதில்லை..
சிலர் மனதில் இருக்கும்
அகத்தின் அழுக்கு
முக அழகில் தெரிவதில்லை..
பலர் மனதில் இருக்கும்
அகத்தின் அழகு
முக அழுக்கில் தெரிவதில்லை..
அழகாய் இருக்கும்
அழகுகள் யாவும்
அழகுடன் முடிவதில்லை...
நிரந்தரமில்லா அழகை
எண்ணி தன்னிலை
தடுமாற தேவையில்லை..
அழகை நினைத்து
அகங்காரம் அடைய
ஆண்டவன் விடுவதில்லை..
---------------
சாம்.சரவணன்

எழுதியவர் : சாம்.சரவணன் (24-Sep-20, 8:21 pm)
சேர்த்தது : Sam Saravanan
Tanglish : ethu alagu
பார்வை : 623

மேலே